காலைத் தியானம் – அக்டோபர் 22, 2021

சங் 38: 1- 10      

என் அக்கிரமங்கள் . . . என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று   

                           நாம் பாவத்தோடு உறவு கொண்டாட உண்டாக்கப்பட்டவர்கள் அல்ல. தேவனோடு உறவாடும்படி உண்டாக்கப்பட்டவர்கள்.  ஆகையால் பாவம் செய்துகொண்டு ஒருவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. பாவம் செய்கிறவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல பிறரை நம்ப வைக்கலாம். ஆனால் உண்மையில் அவர்களிடம் மகிழ்ச்சியும் இல்லை; நிம்மதியும் இல்லை. பாவத்தில் ஈடுபடுகின்ற சமயத்தில் அது இன்பத்தைத் தருவதைப் போன்ற ஒரு எண்ணம் வரலாம். ஆனால் அந்த இன்பம் நிலைப்பதில்லை. பாவத்தில் நிம்மதியாக ஈடுபட முடிவதில்லை. குற்ற உணர்வு நம்மை வாட்டுகிறது. பாவத்தின் பாரம் நம்மை அழுத்துகின்றது. வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் என்று அழைத்த இயேசுவை நோக்கிச் செல்வதைத் தவிர வேறே வழியில்லை.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் அழைத்தபடி நான் உம்மண்டை வந்துவிட்டேன். இளைப்பாறுதல் தாரும். ஆமென்.