காலைத் தியானம் – அக்டோபர் 23, 2021

சங் 38: 11- 22      

என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு   

                           தாவீது ராஜா தன் பாவங்களினிமித்தமும் அக்கிரமங்களினிமித்தமும், தன் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை என்றும் தன் எலும்புகளில் சவுக்கியமில்லை என்றும் சொல்லுகிறார். மனிதனுக்கு வரும் நோய்கள் எல்லாவற்றிற்கும் அவனுடைய பாவங்கள் காரணம் அல்ல. பிறவிக் குருடன் ஒருவனை இயேசு பார்த்தபோது, இயேசுவின் சீஷர்கள் கேட்ட கேள்வியையும் அவர் சொன்ன பதிலையும் நாம் யோவான் 9ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். ஆனால் சில சமயங்களில் நமக்கு வரும் நோய்களுக்கு நம்முடைய பாவங்களே காரணம் என்பதை இந்த சங்கீதம் உறுதிப்படுத்துகிறது. தாவீதைப் போல நாமும் மனந்திரும்பி, நம்முடைய பாவங்களை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, ஆரோக்கியமான சரீரத்தைத் திரும்ப பெற்றுக் கொள்வோம்.

ஜெபம்:

ஆண்டவரே, என் உடல் நலக்குறைவின் மூலமாக என்னோடு பேசுகிறதற்காக உமக்கு நன்றி. உம் சத்தத்திற்குக் கீழ்ப்படிய உதவி செய்யும். ஆமென்.