சங் 39: 4 – 13
நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே
மனிதனை மாயை என்று தாவீது ராஜா குறிப்பிடுவதின் அர்த்தம் என்ன? இந்த உலகத்தில் நிச்சயம் என்று நாம் நம்புகிறவைகள் அனைத்தும் நிச்சயமற்றவை. நிரந்தரமானவை என்று நினைப்பவைகள் எல்லாமே நிரந்தரமற்றவை. நித்திய வாழ்விற்குப் பிரயோஜனமாக நேரத்தை உபயோகிக்காமல், வீணான காரியங்களிலும், மறுமைக்கு எடுத்துக் கொண்டுபோக முடியாத பணம், செல்வம், தங்கம், நிலம் போன்றவைகளுக்காகவும் வாழ்நாளையெல்லாம் வீணடிக்கிறோம். மேலும் நாம் ஒருவருக்கொருவர் போட்டுக்கொள்ளும் சண்டைகளில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? திருச்சபைகளில் பதவிகளை விரட்டிக் கொண்டு ஓடுவதில் எதாவது பலன் உண்டா? உன் பூலோக வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கின்றதா? அந்த நோக்கம் நிறைவேறுகிறதா? ஆண்டவர் ஆசீர்வாதமாய்க் கொடுத்திருக்கும் இந்த வாழ்க்கையை வீணடித்துவிடாதே.
ஜெபம்:
ஆண்டவரே, நிரந்தரமற்ற இந்த என் பூலோக வாழ்க்கை, நிரந்தரமான பரலோக வாழ்க்கையைப் பிரதிபலிக்க உதவி செய்யும். ஆமென்.