காலைத் தியானம் – அக்டோபர் 26, 2021

சங் 40: 1 – 9

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்      

                           கானாவூர் திருமண வீட்டில் என் வேளை இன்னும் வரவில்லை என்று சொன்ன இயேசு கிறிஸ்துவின் வேளை திருமண விருந்து முடிவதற்குள் வந்து விட்டது. தான் நேசித்த லாசரு வியாதியாயிருக்கிறான் என்று கேள்விப்பட்டும், இயேசு தாம் இருந்த இடத்திலேயே மேலும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டார். லாசரு மரித்து நான்கு நாட்கள் கடந்தபின்தான் இயேசு கிறிஸ்துவின் வேளை வந்தது. நம்முடைய குறைவுள்ள அறிவின்படி இயேசு தாமதிக்கிறார் என்று நினைக்கிறோம். ஆனால் ஆண்டவருடைய திட்டத்தில் தாமதம் என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. லாசரு உயிரோடெழுப்பப்பட்ட அற்புதத்தைக் குறித்த ஒரு பாடலில், Though He came four days late, He was just on time என்ற வரி இருக்கின்றது. ஆண்டவர் ஏன் என் ஜெபத்திற்குப் பதில் தரவில்லை என்று கேட்கும் நீயும், அவருக்காகப் பொறுமையோடு காத்திருக்கும்படி அழைக்கப்படுகிறாய்.

ஜெபம்:

ஆண்டவரே, உமது வேளைக்காகக் காத்திருக்கும் பொறுமையை எனக்குத் தாரும். ஆமென்.