சங் 40: 10 – 17
நான் சிறுமையும் எளிமையுமானவன்
நாம் ஓரளவு படித்துவிட்டால், ஒரு நல்ல வேலைக்கு வந்துவிட்டால், வேலையில் பதவி உயர்வு பெற்றுவிட்டால், பணவசதி வந்து விட்டால் . . . இந்த உலகில் ஒரு பெரிய மனிதனாகிவிட்டோம் என்ற எண்ணம் நமக்கு வந்துவிடுகிறது. சீடர்களின் கால்களைக் கழுவிய இயேசுவைப் பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நம்மிடத்தில் தாழ்மை காணப்படுவதில்லை. சகல விதமான செல்வமும், வலிமையும் மிகுதியாய்ப் பெற்றிருந்த தாவீது ராஜா தம்மை சிறுமையும் எளிமையுமானவன் என்று கூறுகிறார். ஆண்டவரையும் அவருடைய வல்லமையையும் அறிந்திருந்த தாவீது, தன்னுடைய செல்வமும் வலிமையும் ஆண்டவருக்கு முன் ஒன்றுமில்லை என்பதை அறிந்திருந்தார். ஆண்டவரையும் அவருடைய வல்லமையையும் நீ அறிந்திருக்கிறாயா?
ஜெபம்:
ஆண்டவரே, தாழ்மையான சிந்தை என்னில் நிலைத்திருக்கக் கிருபை தாரும். ஆமென்.