காலைத் தியானம் – அக்டோபர் 28, 2021

சங் 41: 1 – 13

சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்      

                           சிறுமைப்பட்டவன் என்றால் வறுமையில் வாழும் ஏழைகளை மாத்திரம் தானே நினைக்கிறோம். அவர்களுக்கு ஏதோ சிறிதளவு பண உதவி செய்துவிட்டால் நம் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறோம். ஆனால், மனப்பாரத்தோடு, தனிமையாய், என்னை எல்லாரும் கைவிட்டுவிட்டார்களே என்று வருத்தத்துடன் ஆலயத்தில் உன்னோடு வந்து உட்கார்ந்து விட்டுப் போகிறவர்கள் எத்தனை பேர் என்பது உனக்குத் தெரியுமா? என்னோடு யாரவது பேச மாட்டார்களா என்று ஏங்குகிறவர்கள் நீ ஆராதிக்கும் ஆராதனைக்கே வருகிறார்கள் என்பதை நீ அறிவாயா? ஆலயம் முடிந்ததும் முடியாததுமாய் நீ வீட்டை நோக்கி ஓடிவிட்டால் அவர்களை எப்படி சந்திக்க முடியும்? ஆலயத்தில் எல்லாருமே அப்படி ஓடிவிட்டால், கிறிஸ்தவ ஐக்கியம் எப்படி வளரும்?

ஜெபம்:

ஆண்டவரே, தாழ்மையாஆண்டவரே, உம்முடைய அன்பை நான் வெளிப்படுத்த நீர் கொடுக்கும் தருணங்களை உபயோகித்து செயல்பட உதவி செய்யும். ஆமென்.