சங் 42: 1 – 11
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல
இந்த வார்த்தைகளின் பொருள் என்ன? மான்கள் வேட்டைக்காரர்களாலும், மற்ற காட்டு மிருகங்களாலும் அடிக்கடி துரத்தப்படுகின்றன. ஆகவே நீரோடைகளை விட்டு வெகு தூரம் ஓடிவிடும் சூழ்நிலை ஏற்பட்டு களைப்புடன் இருக்கும் மான்கள் தொடர்ந்து உயிர் வாழ தண்ணீர் மிகவும் தேவை. அது போல சாத்தானாலும் சூழ்நிலைகளினாலும் ஆண்டவரை விட்டு நாம் விலகிப் போய்விடுகிறோம். நம் ஆத்துமா உயிர் வாழ வேண்டுமானால் ஜீவ தண்ணீராகிய இயேசு கிறிஸ்து நமக்குத் தேவை. இதை நாம் உணர்ந்திருந்தால், நம் ஆத்துமாவும் அதே வாஞ்சையோடு கர்த்தரைத் தேடும். தாகத்தோடு இருக்கும் மான்களுக்கு நீரோடையின் மீது இருக்கும் அதே வாஞ்சை உனக்கு உன் ஆண்டவர் மீது இருக்கிறதா?
ஜெபம்:
ஆண்டவரே, உலகம் என்னை உம்மிடமிருந்து அடிக்கடி பிரித்துவிடுகிறது. நான் உம் மீது வைத்திருக்கும் வாஞ்சை குறைந்துவிடாதபடி காத்துக் கொள்ளும். ஆமென்.