காலைத் தியானம் – அக்டோபர் 30, 2021

சங் 43: 1 – 5

உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்               

                           இசை, மனிதனுக்கு தேவனைத் துதிப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஞானம். தேவ தூதர்களும், பரம சேனைகள் அனைத்தும் இசையின் உதவியுடன் தேவனைத் துதித்துக்கொண்டேயிருக்கிறார்கள். பரலோக வாழ்க்கையில் நாமும் அதைத்தான் செய்யப்போகிறோம். இன்று உலகில் இருக்கும் ஆயிரக்கணக்கான இசைக்கருவிகளும் நாம் தேவனைத் துதிப்பதற்காகக் கொடுக்கப்பட்டவை தான். ஆனால் சாத்தான் சும்மாயிருப்பதில்லை. அதே இசைக்கருவிகளை வைத்து தன்னுடைய புகழை மனிதர்கள் பாடவேண்டும் என்று விரும்புகிறான். ஆகவேதான் நம்மைத் திசைத் திருப்பும்படி அநேக ஆபாச பாடல்களையும், ஆண்டவரை இழிவுபடுத்தும் பாடல்களையும் மனிதர் மூலமாகவே இவ்வுலகில் புகுத்திவிட்டான். ஆண்டவரைத் துதிப்பதற்காகவே உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இசை ஞானம், இசைக் கருவிகள் ஆகியவற்றை, அறியாமல்கூட சாத்தானை மகிழ்விக்க உபயோகித்துவிடாதே.

ஜெபம்:

ஆண்டவரே, சாத்தானுடைய சூழ்ச்சிகளிலிருந்து என்னை விலக்கிக் காரும். ஆமென்.