சங் 44: 1 – 10
நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப் பண்ணுகிறீர்
ஒரு பத்து மாடிக் கட்டிடத்தின் மாடியில் ஒருவன் மாட்டிக்கொண்டான். கதவு தெரியாமல் பூட்டப்பட்டுவிட்டது. மேலிருந்து கீழே தரையில் நடமாடும் மக்களைப் பார்க்க முடிந்தது. சத்தம் போட்டுப் பார்த்தான். ஒருவருக்கும் அது கேட்கவில்லை. ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து கீழே சென்ற மனிதனுக்கருகில் எறிந்தான். அந்த மனிதன் அதை எடுத்துத் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போய்விட்டான். அடுத்ததாக அங்கே போய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணின் முன் ஒரு ரோஜாப் பூவைப் போட்டான். அவள் அதை எடுத்து எவ்வளவு அழகான பூ என்று சொல்லி, தலையில் வைத்துக் கொண்டு போய்விட்டள். கடைசியில் வேறு வழி தெரியாமல் மாடியிலிருந்த மனிதன் ஒரு கல்லை எடுத்து, தரையில் சென்று கொண்டிருந்த ஒருவன் மீது எறிந்தான். உடனடியாக அந்த மனிதன் மேலே நோக்கிப் பார்த்தான். நாமும் ஆண்டவரிடமிருந்து அநேக ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். ஆனால் நன்றி சொல்லக்கூட அவரை நோக்கிப் பார்ப்பதில்லை. துன்பங்கள் வரும்போதுதான் அவரை நோக்கிப்பார்த்து ஆண்டவரே, ஆண்டவரே என்று சொல்லுகிறோமோ?
ஜெபம்:
ஆண்டவரே, ஆசீர்வாதங்கள் மூலமாக நீர் பேசும்போதும் உமது சத்தத்துக்கு செவி கொடுக்க எனக்கு நல்மனதைத் தாரும். ஆமென்.