காலைத் தியானம் – நவம்பர் 01, 2021

சங் 44: 11 – 26

உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்

                           இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து நம்மை மீட்கும்படி தம் உயிரைக் கொடுத்து, உயிர்த்தெழுந்த நாட்களுக்கு அநேக வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சங்கீதம் இது. சங்கீதக்காரனுக்கு ஒன்று நிச்சயமாகத் தெரிந்திருந்தது. நாம் மீட்கப்படுவது ஆண்டவருடைய சுத்தக் கிருபை என்னும் உண்மைதான் அது. சங்கீதக்காரன் சொல்வதைக் கவனியுங்கள். உம்மை நாங்கள் மறக்கவில்லை. உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம் பண்ணவில்லை. எங்கள் இருதயம் பின் வாங்கவில்லை. எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை. இவ்வாறாகத் தங்களுடைய பக்தி வாழ்க்கையைக் குறித்து அடுக்கிக்கொண்டே போகிறார். ஆனால் இந்தக் காரணங்களுக்காக எங்களை மீட்டுக் கொள்ளும் என்று கேட்காமல், சங்கீதக்காரன், உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டு விடும் என்று கெஞ்சுகிறார். அந்தக் கிருபை உனக்கும் உண்டு.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் என்னைப் பாவப் பிடியிலிருந்து மீட்டு, இரட்சித்து ஆசீர்வதித்துள்ளது உமது சுத்தக் கிருபை என்பதை உணருகிறேன். நன்றி சுவாமி. ஆமென்.