காலைத் தியானம் – நவம்பர் 02, 2021

சங் 45: 1 – 17

நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்

                           கோராகின் சந்ததியாரில் ஒருவனால், சாலொமோன் ராஜாவுக்காக அவருடைய திருமண வைபவத்திற்காக எழுதப்பட்ட கவிதையே இந்த சங்கீதம் என்று நம்பப்படுகிறது. ராஜாவுக்காக எழுதப்பட்டிருந்தாலும், ராஜாதி ராஜாவும், மணவாளனுமான இயேசு கிறிஸ்துவையும், சபையாகிய மணவாட்டியையும் குறித்த தீர்க்கதரிசன வார்த்தைகள் அடங்கிய சங்கீதம் என்பதை நாம் மறுக்க முடியாது. ஆண்டவர் நீதியை விரும்புகிறவர். உலகில் இத்தனை அக்கிரமங்கள் ஏன் அனுமதிக்கப்படுகின்றன என்பதற்குப் பதில் நமக்குத் தெரியாது. ஆனால் ஆண்டவர் அக்கிரமத்தை வெறுக்கிறார் என்பது நிச்சயமாகத் தெரியும். அதற்காக ஆண்டவரைத் துதிப்போம்.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் எப்பொழுதும் நீதியை விரும்புகிறதற்காக உம்மைத் துதிக்கிறோம். அக்கிரமத்தை வெறுக்கிறதற்காக உம்மைப் புகழுகிறோம். ஆமென்.