காலைத் தியானம் – நவம்பர் 03, 2021

சங் 46: 1 – 11

நீபூமி நிலை மாறினாலும், ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி… பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்

                           இரண்டாம் மூன்றாம் வசனங்கள் சுனாமியைப் போன்ற இயற்கைச் சீற்றங்களைக் குறித்த தீர்க்கதரிசன வார்த்தைகள். இந்தியாவிலேயே நிக்கோபார் தீவுகளில் சுனாமிக்கு முன்பதாகக் கடலுக்குள் இருந்த இடங்களில் சில இப்பொழுது வெட்டாந்தரையாகக் காட்சியளிக்கின்றன. வெளியே இருந்த நிலத்தின் ஒரு பகுதியை கடல் மூடிவிட்டது. மகாபலிபுரத்தில் கடல் நீர் சுனாமிக்குப் பின் பின்வாங்கிவிட்டது. இன்னும் பல இடங்களில் கடற்கரைகளில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. பூமி நிலை மாறிவிட்டது. சுனாமி ஏற்படுத்திய பீதியை நம்மில் 30 வயதைத் தாண்டியவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. சமீப நாட்களில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா என்னும் கிருமி உலகெங்கும் ஏற்படுத்திவரும் கொடூரங்களையும் நாம் அனைவரும் அறிவோம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் கர்த்தரை நம்பியிருக்கிற நாம் பயப்பட வேண்டியதில்லை. கோவிட் சூழ்ந்நிலையிலும், சுனாமிக்களின் மத்தியிலும், அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். “Be still and know that I am God.”

ஜெபம்:

ஆண்டவரே, பரிசுத்த வேதாகமத்தில் முன்னறிவித்துள்ளபடி அநேக அழிவுகளை உலகெங்கும் காண்கிறோம். இந்நிலையிலும் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற தேவாதி தேவன் நீரே என்பதற்காக உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.