காலைத் தியானம் – நவம்பர் 06, 2021

சங் 49: 1 – 9

ஆத்தும மீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது

                           Redemption does not come so easily, for no one can pay enough to live forever. பழங்காலத்தில் அடிமைகள் வியாபாரப் பொருட்களாக இருந்த சமயத்தில், ஒரு அடிமை விடுவிக்கப்படவேண்டுமானால் அதற்கு வேண்டிய பணத்தை யாராவது கொடுக்கவேண்டும். நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, மாற்கு 10:45, எபேசியர் 1:7, எபிரேயர் 9:12 ஆகிய வசனங்களில் சொல்லியிருக்கிறபடி தம்முடைய இரத்தத்தை விலையாகக் கொடுத்து, பாவத்திற்கு அடிமைகளான நம்மை மீட்டுக் கொண்டார். நித்திய வாழ்க்கைக்குள் பிரவேசிக்க அது ஒன்றுதான் வழி. உன்னுடைய திரளான செல்வத்தால் இரட்சிப்பை விலைக்கு வாங்க முடியாது. எப்படிப்பட்ட வாழ்க்கை வேண்டுமானாலும் வாழ்ந்துகொள்ளலாம்; ஆலயத்துக்குப் பெரிய தொகை ஒன்றைக் காணிக்கையாகக் கொடுத்துவிட்டால் மோட்சம் சென்றுவிடலாம் என்று நினைக்கிறாயோ?

ஜெபம்:

ஆண்டவரே, என்னை மீட்டுக்கொண்ட விலை மதிக்க முடியாத உமது அன்பிற்காக நன்றி சுவாமி. ஆமென்.