காலைத் தியானம் – நவம்பர் 08, 2021

சங் 50: 1 – 9

அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும், பூமியையும் கூப்பிடுவார்

                           இன்று வாசித்த பகுதியிலிருந்து நாம் அறிந்துகொள்ளும் பாடங்கள் பல. முதலாவதாக, ஆண்டவர் தாமே தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்கப் போகிறார். இதில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் அனைவரும் இருப்போம். ஆண்டவரோடு உடன்படிக்கைச் செய்துகொண்டு அதன்படி நடக்காத யாவரும் கூட அந்த நியாயத்தீர்ப்பில் இருப்பார்கள். இரண்டாவதாக நம்முடைய செயல்கள், சிந்தனைகள் இவற்றில் ஒன்றாகிலும் கவனிக்கப்படாமல் போவதில்லை. அவைகள் நல்லவைகளாக இருந்தாலும் சரி, கெட்டவைகளாக இருந்தாலும் சரி. மூன்றாவதாக அவர் நியாயந்தீர்க்கும்போது மனிதரை அல்ல, வானங்களையும் பூமியையும் தான் சாட்சியாகக் கூப்பிடுவார். கடைசியாக, நாம் நியாயந்தீர்க்கப் படுவோம் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் நியாயந்தீர்க்கும்போது, நான் உத்தமனாகக் காணப்பட உதவி செய்யும். ஆமென்.