காலைத் தியானம் – நவம்பர் 10, 2021

சங் 51: 1 – 10

இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன்        

                           தாவீது ராஜாவின் மேன்மை, அவர் துணிகரமாய் பாவம் செய்துவிட்டு அதைத் “திறமையோடு” மூடி மறைக்க முயற்சி செய்ததில் வெளிப்படவில்லை. நாத்தான் தீர்க்கதரிசியால் உணர்த்தப்படும்பொழுது, தன் பாவத்தை ஒத்துக்கொண்ட விதத்திலும், கர்த்தரிடத்தில் முற்றிலுமாய் சரணடைந்து, மன்னிப்புக் கேட்டு, கழுவப்பட்டு, புதிய மனிதனாக மாற்றப்பட்ட விதத்திலும் தான் தாவீது ராஜாவின் மேன்மை வெளிப்பட்டது. ஆதாமின் மூலமாக பாவம் மனிதனுக்குள் வந்துவிட்டது. ஆதாமின் சந்ததியாராகிய நாம் உருவாகும்போதே துர்க்குணம் நமக்குள் வந்துவிடுகிறது. துர்க்குணம் நிறைந்த உள்ளத்தை முற்றிலுமாய்க் கழுவி, நம்மை வெண்மையாக்கி, சுத்த இருதயத்தை உருவாக்கக் கூடியவர் இயேசு கிறிஸ்து ஒருவரே.

ஜெபம்:

ஆண்டவரே, சுத்த இருதயத்தை என்னிலேயும் சிருஷ்டியும். ஆமென்.