சங் 51: 11 – 19
உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளாமலும் இரும்
நாம் நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்று இரட்சிக்கப்பட்ட உடனேயே சுத்தமாகிவிடுகிறோம். பரிசுத்த ஆவியானவரும் நம்மில் வாசம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார். நம்மைத் தொடர்ந்து சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்படி ஜெபித்தால், பரிசுத்த ஆவியானவரும் அதற்கு உதவிசெய்கிறார். ஆனால் தூய்மையை நாடாமல், துணிகரமான பாவங்களைத் தொடர்ந்து செய்தால், பரிசுத்த ஆவியானவர் நம்மைவிட்டு விலகிப் போய்விடுகிறார். இருளும் ஒளியும் எப்படி சேர்ந்து இருக்கமுடியும்? கர்த்தர் பரிசுத்த ஆவியை நம்மிடத்திலிருந்து எடுத்துக்கொள்வதில்லை. நாம் தான் பரிசுத்த ஆவியை விரட்டிவிடுகிறோம்.
ஜெபம்:
ஆண்டவரே, என்னைத் தூய்மையாக வைத்துக்கொள்ள எனக்கு உதவிசெய்யும். ஆமென்.