காலைத் தியானம் – நவம்பர் 12, 2021

சங் 52: 1 – 9

தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்   

                           தாவீதுக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம் என்ற நிலை. சவுல் தாவீதைக் கொல்ல முயற்சித்துக் கொண்டே இருந்தான். இதைத் தவிர தோவேக்கு போன்ற  மனிதர்களை நம்ப முடியாத நிலை. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தாவீது, தான் தேவனுடைய ஆலயத்தில் தேவனை முற்றிலுமாய் விசுவாசித்து அவரிலே நிலைத்திருப்பதாகக் கூறுகிறார். மேலும் தன்னைப் பச்சையான ஒலிவமரத்திற்கு ஒப்பிடுகிறார். பச்சை மரம் உயிர் உள்ளது. அது வளர்ந்துகொண்டே இருக்கும். அது மாத்திரமல்ல, ஒலிவமரம் அநேக ஆண்டுகள் உயிரோடிருக்கும் ஒரு மரம். தாவீதிடம் காணப்பட்ட விசுவாசம் உன்னிடம் உண்டா?

ஜெபம்:

ஆண்டவரே, நான் துன்பங்களைச் சந்திக்கும் நேரங்களிலும் தாவீதிடம் காணப்பட்ட விசுவாசம் என்னிலும் கானப்பட கிருபை தாரும். ஆமென்.