காலைத் தியானம் – நவம்பர் 13, 2021

சங் 53: 1 – 6

தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்  

                           ஆதாம், ஏவாள் மூலமாகப் பாவம் மனித குலத்திற்குள் நுழைந்த நாள் முதல், தேவன் ஏக்கத்துடன் நம்மைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார். யோபுவைப் போன்ற உத்தமமான மனிதர்களை அவர் தேடிக் கொண்டேயிருக்கிறார். அவருக்கு, ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு சிலரே கிடைக்கிறார்கள். நீ ஏன் அந்த ஒரு சிலரில் ஒருவனா(ளா)க இருக்கக் கூடாது? பரலோகத்திலிருந்து உன்னை நோகிப் பார்க்கிறார். அவரை ஏமாற்றம் அடையச்செய்யாதே. உன் வாழ்க்கையை முழுவதுமாக அவர் கையில் ஒப்புக்கொடு.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் என்னை ஆவலோடு பார்த்துக்கொண்டேயிருக்கிறீர் என்பதை உணருகிறேன். என் வாழ்க்கையை உமது கையில் எடுத்துக் கொண்டு, என்னையும் உபயோகியும். ஆமென்.