காலைத் தியானம் – நவம்பர் 14, 2021

சங் 54: 1 – 7

அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி என்னை விடுவித்தார் 

                           தாவீது ராஜா நெருக்கத்தில் இருந்தபோது, தான் விடுவிக்கப்படுகிறதைக் காணமுடிந்தது. மனிதர்களில் யாரையும் தாவீதுக்கு நம்ப முடியவில்லை. ஒருவர் பின் ஒருவராக அவரைக் காட்டிக்கொடுக்கவும் அவருக்குத் துரோகம்பண்ணவும் தயாராக இருந்தார்கள். தாவீது தேவனை நோக்கிப் பார்த்தார். அவருடைய விண்ணப்பம் துதியாக மாறுகிறது. துதிகளில் தாவீதின் விசுவாசம் வெளிப்படுகிறது. நமக்கு இன்றைய பாடம் அதுதான். துன்ப நேரங்களில் கர்த்தரை நோக்கிப் பார்த்து விண்ணப்பங்களை ஏறெடுத்தால் மாத்திரம் போதாது. அவ்வேளையில் கர்த்தரைத் துதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஜெபம்:

ஆண்டவரே, எல்லா சூழ்நிலைகளிலும் விசுவாசத்துடன் உம்மைத் துதிக்கக் கற்றுதாரும். ஆமென்.