சங் 55: 1 – 11
மரணத்திகில் என் மேல் விழுந்தது; பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது
வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் மனிதர்களை நாம் சாதாரண மனிதர்களாகவே பார்ப்பதில்லை. அவர்கள் சாதாரண உணர்வுகளைக் கடந்த விசேஷித்த மனிதர்கள் என்று நினைத்துவிடுகிறோம். தாவீது ராஜா Super Man அல்ல. நம்மைப் போன்ற உணர்வுகள் உடைய மனிதன்தான். ஆனால் இக்கட்டான நேரங்களில் தங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்துவதால் அவர்கள் விசேஷித்த மனிதர்களாகிவிடுகிறார்கள். மரணத்திகில், பயம், நடுக்கம் போன்ற உணர்வுகள் தாவீதையும் வாட்டின. தன்னுடைய உணர்வுகளை உள்ளபடியே எழுதிய தாவீதுக்காக தேவனைத் துதிப்போம். நமக்குள்ள உணர்வுகளைப் போல சாதாரண உணர்வுகளையுடைய தாவீது வாழ்ந்த வெற்றி வாழ்க்கையை நாமும் வாழமுடியும் என்பதற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.
ஜெபம்:
ஆண்டவரே, தாவீதைப் போல உம்மைச் சார்ந்திருக்கும் வெற்றி வாழ்க்கை வாழ எனக்கு உதவிசெய்யும். ஆமென்.