காலைத் தியானம் – நவம்பர் 16, 2021

சங் 55: 12 – 23

நீயே அவன்             

                           தாவீதை, சில காரியங்களில் இயேசு கிறிஸ்துவின் முன்னோடியாகப் பார்க்கலாம். தாவீதுக்குத் தன்னுடன் இருந்தவர்களையே நம்ப முடியவில்லை. என்னை நிந்தித்தவன் என் பகைஞன் அல்ல; அவன் என் தோழன் என்கிறார். இயேசு கிறிஸ்துவின் நிலையும் அதுதானே! தம்முடைய சொந்த ஜனமாகிய இஸ்ரவேலர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அவரைக் கொல்லவேண்டும் என்றார்கள். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் அவருடன் நெருங்கிப் பழகிய 12 சீஷர்களில் ஒருவன். மதத் தலைவர்கள் தான் இயேசுவைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று ஆலோசனைப்பண்ணினார்கள். உனக்கும் இயேசுவை நன்றாகத் தெரியும். அவரோடு நெருங்கிப்பழகிய அனுபவமும் உனக்கு உண்டல்லவா? அப்படியிருந்தும், நீ இன்னும் அவரைச் சிலுவையில் அறைந்துகொண்டிருக்கிறாயோ? உன் சிந்தனைகளையும் உன் செயல்களையும் பரிசோதித்துப் பார். ஆண்டவர் உன்னையும் பார்த்து, “நீயே அவன்” என்று சொல்லும்படி நடந்துகொள்ளாதே.                                        

ஜெபம்:

ஆண்டவரே, யூதாஸைப் போல் இல்லாமல், எப்பொழுதும் நீர் நம்பக்கூடிய தோழனாகவே இருக்க விரும்புகிறேன். உமது கிருபை என்னோடிருக்கட்டும். ஆமென்.