காலைத் தியானம் – நவம்பர் 18, 2021

சங் 57: 1 – 11

எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்                     

                           இக்கட்டான நிலையிலிருந்து எத்தனை சங்கீதங்கள்! தாவீது, பவுல் அப்போஸ்தலன் போன்ற ஆண்டவரின் பிள்ளைகளிடமிருந்து நாம் படித்துக் கொள்ளவேண்டிய முக்கிய பாடம், எந்நிலையிலும் ஆண்டவரைத் துதித்துக் கொண்டிருப்பதுதான். உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் தாவீதின் வாயிலிருந்து துதிகள் அடங்கிய சங்கீதம் தான் வருகிறது. புலம்பல் அல்ல! தேவன் தனக்காக எல்லாவற்றையும் செய்து முடிக்கப்போகிறார் என்பதில் எவ்வளவு நம்பிக்கை பாருங்கள். ஒருவேளை தாவீதைப் போல, உயிருக்கு ஆபத்து என்ற நிலை நமக்கு வராமலிருக்கலாம். ஆனால் உன் பிள்ளைகளின் திருமணக் காரியங்களை தேவன் நன்மையாகச் செய்து முடிக்கப்போகிறார் என்ற விசுவாசம் உனக்கு உண்டா?                                                                                                                   

ஜெபம்:

ஆண்டவரே, தொடர்ந்து என் விசுவாசத்தை உறுதிப்படுத்தும். என் வாய் உம்மைத் துதித்துக்கொண்டே இருப்பதாக. ஆமென்.