காலைத் தியானம் – நவம்பர் 19, 2021

சங் 58: 1 – 11

கரைந்துபோகிற நத்தையைப் போல ஒழிந்து போவார்களாக

                           இது நீதியையும் நியாயத்தையும் தேவன் நிலைநாட்ட வேண்டுமென்று தாவீது தேவனை நோக்கிப் போடும் கூக்குரல்கள் நிறைந்த சங்கீதம். நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்கிறாரா அல்லது துன்மார்க்கரைப் பழி வாங்க வேண்டும் என்கிறாரா என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு, கிருபை, இரக்கம் ஆகியவற்றை ருசித்த நமக்கு தாவீதின் சொற்கள் மிகவும் கடுமையாகத் தெரிகின்றன. துன்மார்க்க வாழ்க்கையை வாழ்ந்த எத்தனையோ பேர் இயேசு கிறிஸ்துவால் தொடப்பட்டு பரிசுத்தவான்களாக மாறிய அனுபவங்களைக் குறித்து அறிந்திருக்கிறோம். அதே சமயம் நியாயத்தீர்ப்பு உண்டென்பது நிச்சயம். அந்த நேரத்தில் துன்மார்க்கனுக்கு அழிவு உண்டென்பதும் நிச்சயம். நரகத்தின் அக்கினியில் சாத்தான் தனியாக இருக்கப் போவதில்லை. உனக்குத் தெரிந்தவர்கள் யாராவது துன்மார்க்க வாழ்க்கை வாழ்ந்துவந்தால், அவர்களுக்காக விசேஷமாக ஜெபம்செய்.                                                                                                                  

ஜெபம்:

ஆண்டவரே, எனக்குத் தெரிந்து பாவத்தில் வாழ்கின்றவர்களை இப்போது நினைக்கிறேன். அவர்களுக்கு இரங்கி அவர்களைப் பாவத்தின் பிடியிலிருந்து இரட்சியும்.  ஆமென்.