காலைத் தியானம் – நவம்பர் 20, 2021

சங் 59: 1 – 17

என் ஜனங்கள் மறந்துபோவார்களே          

                           ஆண்டவரிடமிருந்து பெறும் நன்மைகளை மறந்துவிடுவது நமக்கு வழக்கமாகிவிட்டது. இஸ்ரவேல் மக்களும் அதைத் தானே செய்தார்கள்! கொடிய பஞ்சம் உண்டான போது, தங்களுடைய வம்சம் அழிந்துவிடாதபடி எகிப்துக்கு அழைத்துக் கொண்டுபோகப்பட்டதையும், பிற்காலத்தில் எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து மீட்கப்பட்டதையும், தேவன் நடப்பித்த அற்புதங்களையும், தேவன் கொடுத்த மன்னாவையும், அவர் உருவாக்கிய தலைவர்களையும் மறந்துதானே பொன்னால் செய்த கன்றுகுட்டியை வணங்க ஆரம்பித்தார்கள்! தேவன் உனக்குச் செய்துள்ள நன்மைகளைக் கணக்கிட முடியுமா? நீயும் அவைகளையெல்லாம் மறந்துவிட்டு பணத்தையும் பதவியையும் வணங்க ஆரம்பித்துவிட்டாயோ?                                                                                                                  

ஜெபம்:

ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்துள்ள நன்மைகள் ஏராளம். அவற்றை மறக்கும் சுபாவத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப் போடும். ஆமென்.