காலைத் தியானம் – நவம்பர் 21, 2021

சங் 60: 1 – 12

எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ         

                           தாவீது ஒரு வல்லரசன். தன்னுடைய நாட்டைச் சுற்றியிருந்த நாடுகளையெல்லாம் போரிட்டு வென்று, தன்னுடைய ராஜியத்தைப் பெரிதாக்கிக் கொண்டான். இதைக் குறித்த வரலாற்றை 2 சாமுவேல் 8ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். அவ்வாறு பல போர்களில் வெற்றி பெற்ற போதிலும், ஒரு போரில் தாவீது ஒரு தற்காலிகத் தோல்வி அடைய நேர்ந்தது. அந்த தோல்விதான் இந்த 60ம் சங்கீதத்தின் பின்னணி. இந்தத் தோல்விக்குக் காரணம் என்ன? எங்கள் சேனைகளோடே தேவன் புறப்பட்டு வரவில்லை என்று தாவீது கூறுகிறார். தேவன் ஏன் அந்த தோல்வியை அனுமதித்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் தேவன் இல்லாமல் வெற்றி இல்லை என்பது தாவீதுக்கு நன்றாகத் தெரியும். நீயும் எங்கு சென்றாலும், எந்த காரியத்துக்காக சென்றாலும், உன் ஆண்டவர் உன்னோடு இல்லாமல் போகாதே.                                                                                                                 

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய பிரசன்னம் எப்போதும் என்னோடு இருக்கட்டும். ஆமென்.