காலைத் தியானம் – நவம்பர் 22, 2021

சங் 61: 1 – 8

என் இருதயம் தொய்யும்போது . . . உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்

                           துன்பத்தில் இருக்கும்போது தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். இருதயம் தொய்யும்போதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார். இருதயத் தொய்வு அல்லது மன அழுத்தம் (depression) தான் இன்று உலகிலேயே அதிகமாக இருக்கும் வியாதி என்று கூறுகிறார்கள். ஒருவேளை மன அழுத்தம் உன்னைக் கீழே இழுத்துக் கொண்டிருந்தால், உன் ஆண்டவர் உன்னை உயரமான கன்மலையில் கொண்டுபோய் விடும்படி ஜெபம்பண்ணு. அவர் உன்னைத் தூக்கி விடும்போது நீ உன் ஆண்டவரின் அருகில் இருப்பாய். உலகக் காரியங்கள் உன்னைக் கீழே இழுக்க முடியாது.                                                                                                          

ஜெபம்:

ஆண்டவரே, எனக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் எந்த ஒரு காரியமும் என்னை அணுகாதபடி என்னை உயர்ந்த கன்மலையின் மேல் நிறுத்தியருளும்.  ஆமென்.