காலைத் தியானம் – நவம்பர் 23, 2021

சங் 62: 1 – 12

அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றி விடுங்கள்

                           அன்னாள் கர்த்தருடைய சமுகத்தில் தன்னுடைய இருதயத்தை ஊற்றினாள். தாவீது ராஜாவும் அப்படியே செய்கிறதைப் பார்க்கிறோம். இருதயத்தை ஊற்றி விடுவது முதலாவதாக உனக்கும் உன் ஆண்டவருக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துகிறது. உன் ஆண்டவரோடு உனக்குள்ள தொடர்பு நெருங்கிய அந்நியோனிய உறவா அல்லது வெறும் வியாபாரத் தொடர்பா? Is it an intimate personal relationship or a business relationship? வியாபாரத் தொடர்பை அவர் விரும்புகிறதில்லை. இரண்டாவதாக, இருதயத்தை ஊற்ற வேண்டுமானால் நீ உன் ஆண்டவரை முற்றிலுமாக விசுவாசிக்கவேண்டும். நீ உன் இருதயத்தை ஆண்டவரிடத்தில் ஊற்றிவிடுகிறாயா?                                                                                                          

ஜெபம்:

ஆண்டவரே, என் இருதயச் சிந்தனைகள் அனைத்தும் உமக்குத் தெரியும் என்றாலும், என் இருதயத்தை உம்மிடம் ஊற்றிவிடுவதையே நான் விரும்புகிறேன். நீரே என்னை வழிநடத்தும். ஆமென்.