காலைத் தியானம் – நவம்பர் 24, 2021

சங் 63: 1 – 11

உம்மைப் பார்க்க ஆசையாயிருந்து . . . கண்டேன்

                           சாத்தான் நம்மை வலுக்கட்டாயமாகத் தன் பக்கம் இழுக்க முயற்சித்துக் கொண்டேயிருக்கிறான். ஆண்டவரோ நம் இருதயக் கதவைப் பொறுமையுடன் தட்டிக்கொண்டே இருக்கிறார். He is knocking gently and patiently.  கதவை உடைத்துக் கொண்டு பிரவேசிக்கிறவர் நம் ஆண்டவர் அல்ல.  பணம், பதவி, ஆடம்பரம், கவர்ச்சி, இச்சை, சிற்றின்பம் போன்றவைகள் உன்னை சாத்தானின் பக்கம் இழுக்கின்றன. வானங்கள் (சங் 19:1), கடல்கள், காடுகள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற கர்த்தருடைய படைப்புகள் அவருடைய மகிமையையும் வல்லமையையும் வெளிப்படுத்தி, உன்னை ஆண்டவரிடம் வா அழைக்கின்றன. ஆண்டவரா அல்லது சாத்தானா என்று தெரிந்துகொள்ளும் உரிமை உனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசையோடு தேடினால் உன் ஆண்டவரைக் கண்டடைவாய். (வெளி 3:20)                                                                                                         

ஜெபம்:

ஆண்டவரே, நீர் என்னோடேயே தங்கியிரும். சாத்தான் என்னை அணுகாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.