காலைத் தியானம் – நவம்பர் 26, 2021

சங் 65: 1 – 13

அவர்தண்ணீர் இறைத்து . . .  அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்

                           இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வெளிவரும் பாடல்களிலும் கவிதைகளிலும், வாழ்க்கையின் துன்பங்களை மேகங்களுக்கும்,  மகிழ்ச்சியான சம்பவங்களை வெயிலுக்கும் (சூரிய ஒளிக்கும்) ஒப்பிட்டிருப்பதைக் காணலாம். அடிக்கடி தண்ணீர் தட்டுப்பாட்டினால் கஷ்டப்படும் தமிழ்நாட்டில் மேகங்களும் மழையும் வராதா என்று ஏங்கும் நிலையில் நாம் இருக்கிறோம். வருடத்தின் பெரும்பான்மையான நாட்களில் சூரியனையே காணாத மக்கள் மேகத்தையும் மழையையும் “துன்பம்” என்று நினைக்கிறார்கள். நாம் வெயிலைத் “துன்பம்” என்று நினைக்கிறோம். உண்மை என்னவென்றால் வெயிலும் மழையும் நாம் ஆண்டவரிடமிருந்து பெறும் ஆசீர்வாதங்கள். சூரியனும் மேகங்களும் நமக்குக் கிருபையாய்க் கொடுக்கப்பட்டுள்ளவை. பயிர்கள் தாமாக முளைத்துவிடுவதில்லை. அவற்றை விளைவிக்கிறவர் தேவன் ஒருவரே. தேவனுடைய ஆசீர்வாதங்களைத் தெரிந்து அடையாளம் காணமுடிகிறதா?                                                                                                         

ஜெபம்:

ஆண்டவரே, நீர் கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்கள் ஏராளம். அவைகளுக்காக உமக்கு நன்றி சுவாமி. ஆமென்.