காலைத் தியானம் – நவம்பர் 28, 2021

சங் 66: 8 – 20

வெள்ளியைப் புடமிடுகிறது போல எங்களைப் புடமிட்டீர்

                           பிதாவாகிய தேவனுக்கு, பாவமே செய்யாத ஒரு குமாரன் உண்டு. ஆனால் சோதிக்கப்படாத குமாரன் அவருக்கு இருந்ததே இல்லை என்று C.H. ஸ்பர்ஜன் கூறுகிறார். ஆம் ஆண்டவர் நாம் சோதிக்கப்படுவதை அனுமதிக்கிறார். அசுத்தங்கள் கலந்த வெள்ளி அதிக வெப்பத்தில் சூடாக்கப்பட்டு, பிரிந்து வரும் அசுத்தங்கள் நீக்கப்படும். பின்பு வெள்ளி ஆற வைத்து மறுபடியும் சூடாக்கப்படும். மறுபடியும் எஞ்சியுள்ள அசுத்தங்கள் பிரித்து எடுக்கப்படும். இந்த செய்முறை, வெள்ளியை முற்றிலும் சுத்தமானதாக்கி விடுகிறது. நாமும் சோதனைகள் மூலம் விசுவாசத்தில் உறுதியாக்கப்பட்டு தூய்மையாக்கப்படுகிறோம். வெள்ளியைப் புடமிடுகிறவன் ஒரு திறமை வாய்ந்த நிபுணன். புடமிடும்போது அவனுடைய முழு கவனமும் வெள்ளியின் மீதே இருக்கும். நாம் சோதிக்கப்படும்போது கூட ஆண்டவருடைய முழு கவனமும் நம் மீதுதான் இருக்கிறது.                                                                                                       

ஜெபம்:

ஆண்டவரே, சோதனைகளின் நடுவே கடந்து செல்லும் என்னைப் பரிபூரண பரிசுத்த பொருளாக மாற்றியருளும். ஆமென்.