காலைத் தியானம் – நவம்பர் 29, 2021

சங் 67: 1 – 7

தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து

                           உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளே விலைக்கு வாங்கப்படும் காலம் இது. நீதிமன்றங்களில் நியாயம் கிடைக்கும் என்று சொல்லிவிடமுடியாத நிலையில் நாம் இருக்கிறோம். நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் இதே நிலைதான். நம்முடைய தேவன் நேர்மையாய் நியாயந்தீர்க்கிறவர். அவருடைய நியாயத்தீர்ப்பில் எந்த விதமான தப்போ அல்லது பட்சபாதமோ இருக்காது.  உன் தகப்பனும் தாயும் பரிசுத்தவான்கள் என்பதற்காக உனக்கு எந்த விசேஷ சலுகையும் கிடையாது.   உன்னுடைய தாத்தா ஆயிரக்கணக்கானோரை இயேசுவிடம் வழி நடத்தியவர் என்பதற்காக உன் பாவங்கள் மூடி மறைக்கப்பட மாட்டாது.                                                                                                                              

ஜெபம்:

ஆண்டவரே, நியாயத்தீர்ப்பு நாளிலே நான் உத்தமனாய்க் காணப்பட எனக்குக் கிருபை தாரும். ஆமென்.