சங் 68: 1 – 10
தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி
தனிமை நம்மை வாட்டிவிடுகிறது. வாழ்க்கையில் ஏதாவது ஒரு நேரத்தில் நாம் அனைவருமே தனிமையை அனுபவிக்க நேரிடும். தனிமை என்பது தனியாக இருக்கும்போது மாத்திரம் ஏற்படும் அனுபவம் அல்ல. ஒரு கூட்டத்தில் இருக்கும்போது கூட நாம் தனிமையை அனுபவிக்கலாம். நீ தனிமையில் துன்பப்படுகிறாயோ? இயேசு கிறிஸ்துவும் கெத்சேமனே தோட்டத்தில் தனிமையை அனுபவித்தவர் என்பதை மறந்துவிடாதே. அவருக்கு உன் தனிமையின் கொடுமை தெரியும். தன் தாயை நோக்கி “அதோ உன் மகன்” என்று கூறிய இயேசு உனக்கும் ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொடுப்பார். கடந்த காலத்தை நினைத்து துக்கித்துக் கொண்டே இருக்காமல் உன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார். அவர் உன் தனிமையை நீக்குவார்.
ஜெபம்:
ஆண்டவரே, ”அதோ உன் மகன்” என்று நீர் சொல்லும்போது, அதைக் கேட்கும்படி என் காதுகளைத் திறந்தருளும். ஆமென்.