மத் 1: 1 – 6
தாமாரினிடத்தில் . . . ராகாபினிடத்தில் . . . ரூத்தினிடத்தில்
இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் (மரியாளைத் தவிர) நான்கு பெண்கள் குறிப்பிடப்படுகிறார்கள். தாமார், ராகாப், ரூத், பத்சேபாள் ஆகிய இந்த நான்குபேரும் கர்த்தருடைய பார்வையில் விசேஷமானவர்கள். ஆகையால்தான் ஆண்கள் வழியாக மாத்திரம் வரும் வம்ச வரலாற்றில் இந்த பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கர்த்தருடைய படைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம கண்ணியம் (dignity) இருந்தது. காலப் போக்கில் மனிதவர்க்கம் பெண்களைக் கீழ்த்தரமாக நடத்தியது. இன்றும் பெண்களைக் கண்ணியக் குறைவோடு நடத்துகிறவர்கள் உண்டல்லவா? கர்த்தருக்கோ ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது. உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடு கிடையாது. படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடு கிடையாது. அவர் உன்னையும் என்னையும் ஒரே விதமாக நேசிக்கிறார். மனிதர் உன்னை வெறுத்தாலும், ஒடுக்கினாலும் உன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பிடித்துக் கொள். அவருக்கு நீ முக்கியமானவன்(ள்).
ஜெபம்:
ஆண்டவரே, நீர் என்னோடிருக்கும்போது மனிதன் எனக்கு விரோதமாக என்ன செய்யமுடியும்? உம்முடைய அன்பின் அரவணைப்பிற்காக நன்றி சுவாமி. ஆமென்.