காலைத் தியானம் – டிசம்பர் 08, 2021

மத் 3: 1 – 6

பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது . . . கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்                    

                                      நாம் நினைத்தபடி வாழ்ந்துகொண்டு பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமுடியாது. நாம் இயேசு கிறிஸ்துவின் சித்தத்தின்படி வாழவேண்டும். நம்முடைய பாவ வாழ்க்கையைவிட்டு மனந்திரும்பவேண்டும். நமக்கு இப்பூமியில் கொடுக்கப்பட்டிருக்கும் நாட்கள் எப்பொழுது வேண்டுமானாலும் முடிவடையலாம்.  இயேசுவின் இரண்டாம் வருகையும் மிகவும் சமீபமாயிருக்கிறது என்பதை கோவிட் போன்ற கொள்ளை நோய்களும், உலகெங்கும் இயற்கையின் மூலமாக ஏற்படும் அழிவுகளும் வெளிப்படுத்துகின்றன. எப்படிப் பார்த்தாலும் பரலோக ராஜ்யத்துக்காக ஆயத்தப்படும்படி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள நாட்கள் கொஞ்சமே. பரலோக ராஜ்யம் என்பது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்யம். இயேசு தம்முடைய ராஜ்யத்தைக் குறித்துச் சொல்லியுள்ள அநேகக் காரியங்களை மத்தேயு 5, 6, 7ம் அதிகாரங்களில் பார்க்கிறோம். உன் வாழ்க்கையில் கர்த்தருக்காக வழியை ஆயத்தப்படுத்திவிட்டாயா?                           

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய ராஜ்யத்தின் விதிமுறைகளின்படி நான் வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.