காலைத் தியானம் – டிசம்பர் 10, 2021

மத் 3: 11 – 17

இப்பொழுது இடங்கொடு . . .  நமக்கு ஏற்றதாயிருக்கிறது

                                     பாவத்திலிருந்து மனந்திரும்பாமல் ஞானஸ்நானம் பெற முயன்ற பரிசேயரும் சதுசேயரும் கடிந்துகொள்ளப்பட்டதை நேற்று பார்த்தோம். பாவமே அறியாத, மனந்திரும்புதலே அவசியமில்லாத இயேசு ஞானஸ்நானம் பெறுகிறதை இன்று பார்க்கிறோம். பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறவர் யோவானிடம் தண்ணீரில் ஞானஸ்நானம் பெறவேண்டிய அவசியம் என்ன?  யோவான்ஸ்நானன் மனதிலும் அதே கேள்விதான். அந்த கேள்விக்கு விளக்கம் கிடைக்கவில்லை. இப்பொழுது இடங்கொடு என்பது மட்டுமே யோவானுக்குக் கிடைத்த பதில். மேலும், நமக்கு ஏதுவாயிருக்கிறது என்ற வார்த்தைகளிலிருந்து இயேசுவும் யோவானும் இந்த ஞானஸ்நான செயலில் ஈடுபடவேண்டியதிருந்தது என்பதும் தெரிகிறது. ஆண்டவர் நம்மைப் பார்த்தும் சில சமயங்களில் “இப்பொழுது செய்” என்று மாத்திரம் சொல்லுகிறார். காரணத்தைக் கேட்காதே. அவருடைய திட்டங்களில் பல நம்முடைய ஞானத்துக்கு எட்டாதவை.                          

ஜெபம்:

ஆண்டவரே, நீர் சொல்வதைக் கேள்வி கேட்காமல் செய்யும் கீழ்ப்படிதலை எனக்குத் தாரும். ஆமென்.