மத் 4: 1 – 4
பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு . . . ஆவியானவராலே கொண்டுபோகப்பட்டார்
இந்த வார்த்தைகளைச் சேர்த்து வாசித்தால் ஏதோ சாத்தானும் பரிசுத்த ஆவியானவரும் சேர்ந்து இயேசுவை சோதிக்க முடிவு செய்துவிட்டதைப் போல தோன்றுகிறது. பரிசுத்த ஆவியானவர் நம்மைச் சோதிக்கிறவர் அல்ல. அவர் நம்மைப் பெலப்படுத்துகிறவர். பிசாசுதான் சோதனைக் காரன். சோதனைகளில் வெற்றி பெறும்படி இயேசுவை தயாராக்கவே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோகிறார். நம்மில் ஒருவர்கூட சாத்தானின் சோதனைகளிலிருந்து விலக்கப்பட்டவர்கள் அல்ல. உன் சொந்த பெலத்தாலும், ஞானத்தாலும் சாத்தானை வெல்லமுடியாது. சோதனை வரும் நேரங்களில் பரிசுத்த ஆவியானவரின் உதவியைத் தேடு. அல்லது இயேசு காட்டிய வழியில், பரிசுத்த ஆவியானவரோடு நீ அடிக்கடி உறவாடிக்கொண்டிருந்தாயானால் சாத்தானை மேற்கொள்ளும் பெலன் உன்னிடமும் இருக்கும்.
ஜெபம்:
ஆண்டவரே, சோதனைகளை மேற்கொள்ளமுடியாமல் நான் சோர்ந்துபோகும் தருணங்களில் என்னைப் பெலப்படுத்தும். சாத்தானை விரட்டியடிக்க உதவிசெய்யும். ஆமென்.