காலைத் தியானம் – டிசம்பர் 14, 2021

மத் 4: 12 – 17

யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு         

                                     யோவான் காவலில் வைக்கப்படவேண்டிய அவசியம் என்ன? அவன் தலைவர்களின் தவறுகளைத் தயங்காமல் கண்டித்தான். அது அந்நாட்களில் இருந்த மதத் தலைவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பிடிக்கவில்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். யோவான்ஸ்நானன் இயேசுவுக்குப் பாதையைச் செவ்வைப் பண்ணும்படி வந்தவன். இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தவன். அவன் நெருங்கிய சொந்தக்காரனும் கூட. அப்படிப்பட்ட யோவான் கைதுசெய்யப்பட்டவுடன் இயேசு இன்னொரு திசையை நோக்கி சென்றுவிடுகிறார். இயேசு நினைத்திருந்தால் ஒரு அற்புதம் செய்து யோவானை விடுவித்திருக்கலாமே! அவர் ஏன் அப்படி செய்யவில்லை? இயேசு பூமியில் மனிதனாக வாழ்ந்த நாட்களில், பிதாவாகிய தேவன் விரும்பியதைத் தவிர வேறே எதையும் – எவ்வளவு நல்ல காரியமாக இருந்தாலும் – செய்யவில்லை. நாமோ ஊழியம் செய்கிறோம் என்ற நல்ல எண்ணத்தில், எல்லாவற்றையும் செய்ய நினைக்கிறோம். ஆண்டவர் உன்னை “எல்லாவற்றையும் செய்ய” படைக்கவில்லை. நீ என்ன செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ, அதை மாத்திரம் செய்யக் கற்றுக்கொள்.                        

ஜெபம்:

ஆண்டவரே, நீர் விரும்புவதை மாத்திரம் சிறப்பாகச் செய்யும் ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.