காலைத் தியானம் – டிசம்பர் 18, 2021

மத் 5: 7 – 9

இரக்கமுள்ளவர்கள் . . . இரக்கம் பெறுவார்கள்                 

                                     மத்தேயு 5,6,7ம் அதிகாரங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்கத்தை ஒரு பக்தன் மூன்று விதமாகப் பார்க்கிறார். ஐந்தாம் அதிகாரத்தில், உண்மையான நீதிமான் யார் என்பதைப் பற்றியும், ஆறாம் அதிகாரத்தில் போலி நீதிமானைப் பற்றியும், ஏழாம் அதிகாரத்தில் சுயநீதியில் மிதக்கிறவனைப் பற்றியும் வாசிக்கிறோம் என்று அவர் சொல்கிறார். சுய நீதியில் மிதக்கிறவனிடத்தில் இரக்கம் இருக்காது. அவன் மற்றவர்களைவிட தான் பரிசுத்தவான் என்றும், மற்றவர்கள் தண்டனைப் பெறுவதற்கு மாத்திரமே தகுதியுள்ளவர்கள் என்றும் நினைக்கிறான். கர்த்தருடைய இரக்கத்தை அனுபவித்து உணர்ந்தவர்கள், நாம் எல்லாருமே மீட்கப்பட்ட பாவிகள் என்பதை அறிந்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் எப்படி மற்றவர்களிடத்தில் இரக்கம் காட்டாமல் இருக்கமுடியும்? இரக்கமுள்ளவர்கள் மென்மேலும் கர்த்தரிடம் இரக்கம் பெறுவார்கள்.                      

ஜெபம்:

ஆண்டவரே, எல்லாருக்கும் இரக்கம் காட்டும் நற்குணத்தை எனக்குத் தாரும். ஆமென்.