மத் 5: 10 – 12
பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்
இயேசு கிறிஸ்துவுக்காக தைரியமாக பேசும்போதும் செயல்படும்போதும் பலவிதமான துன்பங்களை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். 5ம் வசனத்தில் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வீர்கள் என்று சொல்லப்பட்டிருப்பதும், 11ம் வசனத்தில் இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு துன்பங்கள் வர நேரிடும் என்று சொல்லப்பட்டிருப்பதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானது இல்லை. 5ம் வசனம், ஆண்டவர் இவ்வாழ்க்கையில் உனக்குக் கொடுத்திருக்கும் சுதந்தரத்தை (அல்லது மண்ணுலக ஆசீர்வாதத்தை) திருப்தியுடன் அனுபவிப்பதைக் குறித்துப் போதிக்கிறது. 11ம் வசனமும் 12ம் வசனமும் மண்ணுலக ஆசீர்வாதத்தை அனுபவிக்கும்போதும் துன்பங்களை அனுபவிக்கும்போதும் நம் பார்வை, தொலைநோக்கு, எண்ணம் எல்லாமே பரலோகத்தின் மேல் இருக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறது.
ஜெபம்:
ஆண்டவரே, நான் இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு நாளும் பரலோகராஜ்யத்தைக் குறித்த எண்ணம் என்னைவிட்டு விலகிவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.