காலைத் தியானம் – டிசம்பர் 20, 2021

மத் 5: 13 – 16

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்              

                                     கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களிடத்திலிருந்து ஆண்டவர் அதிகம் எதிர்பார்க்கிறார். நீ உண்மையான கிறிஸ்தவனென்றால், நானுண்டு என் வேலையுண்டு என்று இருக்கமுடியாது. உன்னைச் சுற்றியிருப்பவர்களைக் குறித்து உனக்கு அக்கறை வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றக்கூடிய அளவுக்கு உன் வாழ்க்கை வலிமையுடையதாக இருக்கவேண்டும். நாம் சாப்பிடும் உணவுக்கு எப்படி ஒரு சிறிதளவு உப்பு சுவையை மாற்றிக் கொடுக்கிறதோ, அவ்விதமாக ஒரு சில கிறிஸ்தவர்களால் இவ்வுலகின் சுவையை மாற்ற முடியும்.  நம் நாட்டுக்கு வந்த ஒரு சில மிஷனரிகளின் மூலமாக எத்தனை கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கை மாறிவிட்டது என்பதை யோசித்துப் பாருங்கள். இன்று பலவிதமான துன்பங்களை அனுபவித்துக்கொண்டு கடினமான இடங்களில் ஊழியம் செய்துவரும் நம் நாட்டு மிஷனரிகளால் எத்தனை கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை மாறிக்கொண்டு வருகிறது என்பதையும் யோசித்துப் பாருங்கள். உன்னுடைய வாழ்க்கையின் மூலமாக எத்தனை வாழ்க்கைகள் மாறியிருக்கின்றன?                      

ஜெபம்:

ஆண்டவரே, நானும் மற்றவர்கள் வாழ்க்கைக்கு உப்பாயிருக்க விரும்புகிறேன். என்னையும் உபயோகியும். ஆமென்.