மத் 5: 21 – 26
தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன்
கொலை செய்யாதிருப்பாயாக என்பது பத்து கற்பனைகளில் ஒன்று. இயேசு கிறிஸ்து அந்த கற்பனையை மாற்றவில்லை. அந்த கற்பனையை ஒரு உயர்ந்த நிலைக்குக் கொண்டுபோய் விடுகிறார். மூர்க்கத்தனமே அநேகக் கொலைகளுக்கு மூல காரணமாயிருக்கிறது. இன்னொரு விதமாகச் சொல்லவேண்டுமானால் கொலை என்பது கோபத்தின் (அல்லது மூர்க்க குணத்தின்) விளைவு என்று சொல்லலாம். ஆகையால் இயேசு கிறிஸ்து, விளைவைத் தடுக்கவேண்டுமானால் மூல காரணத்தையே தவிர்க்கவேண்டும் என்று சொல்லுகிறார். உன் சகோதரருடனும், சகோதரிகளுடனும் உனக்கு விரோதம் இருக்குமானால் நீ ஆண்டவரை நெருங்கமுடியாது. யார் மீது தவறு என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. உன் குடும்பத்தில் யாருடனாவது விரோதம் இருந்தால் இன்றே அவர்களோடு ஒப்புரவாகு.
ஜெபம்:
ஆண்டவரே, யாருக்காவது என் மீது கோபமோ அல்லது குறையோ இருக்குமானால், அவனோடு (அல்லது அவளோடு) ஒப்புறவாக எனக்கு உதவிசெய்யும். ஆமென்.