காலைத் தியானம் – டிசம்பர் 27, 2021

மத் 5: 43 – 48

உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்          

                                    இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்கத்தின் முதற்பாகத்தின் கடைசி பகுதியை (வசனங்களை) இன்று வாசித்தோம். மிகவும் கடினமான போதனை.ஆண்டவருக்குப் பிரியமான நீதிமானாக வாழ்வதற்கான கடைசி போதனையை மறுபடியும் கவனியுங்கள். நம்முடைய எதிரியிடம் அன்பு செலுத்தவேண்டும். நம்மை சபிக்கிறவனை ஆசீர்வதிக்கவேண்டும். நம்மை வெறுக்கிறவனுக்கு நன்மை செய்யவேண்டும். நமக்கு துன்பம் கொடுத்துக் கொண்டேயிருப்பவனுக்காக ஜெபிக்கவேண்டும். மத்தேயு ஐந்தாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் போதனைகள் எல்லாவற்றையும் கைக்கொள்ளும்போது “பூரண சற்குணன்” என்ற நிலைக்கு நேராக நம்முடைய பயணம் தொடரும்.                  

ஜெபம்:

ஆண்டவரே, நான் பூரண சற்குணன் என்னும் இலக்கை நோக்கிச் செல்ல எனக்கு உதவிசெய்யும்.  ஆமென்.