மத் 6: 5 – 8
நீ ஜெபம் பண்ணும்போது
போலிச் சாமியாரும் போலிப் பிரசங்கிமாரும் உண்டென்று நமக்குத் தெரியும். போலி நீதிமான்கள் உண்டென்று உனக்குத் தெரியுமா? அதைவிட முக்கியமான, கடினமான கேள்வி – நீயும் நானும் அந்த போலி நீதிமான்களின் பட்டியலில் இருக்கிறோமா? நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்பதற்கான முதல் கேள்வி, நாம் எதற்காக பிறருக்கு உதவி செய்கிறோம் என்பது. அதைக் குறித்து நேற்று தியானித்தோம். நாம் எதற்காக ஜெபிக்கிறோம் என்பது இன்றைய கேள்வி. ஜெபிப்பது நிச்சயமாக மற்றவர்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக அல்ல. உன் ஆண்டவரின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காகக் கூட அல்ல. உன் உள்ளத்தின் ஆழத்திலிருப்பவைகளை உன் ஆண்டவரோடு பேசி தெரியப்படுத்துவதுதான் ஜெபம். ஆகையால் அழகிய ஆடம்பர வார்த்தைகள் முக்கியமல்ல. தேவையில்லை என்றுகூட சொல்லலாம். மற்ற மனிதர் நம்மீது உயர்ந்த எண்ணம் வைக்கவேண்டும் என்று நினைத்து ஜெபித்தால், அந்த உயர்ந்த எண்ணம் கிடைத்துவிடும். ஆனால் அந்த ஜெபம் உன் ஆண்டவரைப் போய்ச் சேராது.
ஜெபம்:
ஆண்டவரே, என் ஜெபத்தை நீர் மாத்திரம் கேட்டால் போதும். தவறான நோக்கங்கள் என் உள்ளத்தில் வந்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.