மத் 6: 9 – 15
நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது
இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களில் அடிக்கடி பிதாவுடன் தனித்திருந்து ஜெபிக்கும்படி போனார். என்ன ஜெபித்தார், எப்படி ஜெபித்தார் என்பது சீஷர்களுக்கே தெரியவில்லை. எப்படி ஜெபிக்கவேண்டும் என்பது பலருக்கும் உள்ளத்தில் எழும்பும் கேள்விதான். குறிப்பாக புது விசுவாசிகளுக்கு இந்த கேள்வி நிச்சயமாக இருக்கும். இயேசு எப்படி ஜெபிக்ககூடாது என்று மாத்திரம் சொல்லிவிட்டு நிறுத்தாமல், எப்படி ஜெபிக்கவேண்டும் என்றும் போதிக்கிறார். கர்த்தருடைய ஜெபம் என்று அழைக்கப்படும் இந்த ஜெபத்தில், பல ஜெப வழிமுறைகளை இயேசு சொல்லிக்கொடுக்கிறார். இன்று அதில் ஒன்றை மாத்திரம் கவனிப்போம். எங்களுக்கு வேண்டிய ஆகாரம். இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் சுற்றித் திரிந்தபோது அவர்களுக்கு ஒவ்வொரு நாளுக்கும் தேவையான மன்னா மாத்திரம் கொடுக்கப்பட்டது. ஆண்டவரே நம்முடைய அன்றாட தேவைகளைத் திருப்தி செய்கிறவர். உன் செல்வத்தின் மீதும் உன் வங்கியில் உள்ள பணத்தின்மீதும் உன் நம்பிக்கையை வைக்காதே.
ஜெபம்:
ஆண்டவரே, என் அனுதின தேவைகளுக்கு உம்மையே நம்பியிருக்க உதவி செய்யும். ஆமென்.