காலைத் தியானம் – ஜனவரி 04, 2022

மத் 6: 22 – 23   

உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால்   

                                    வெளிச்சம் எப்படி இருளாயிருக்க முடியும்? கத்தியை சமையல் பண்ணுவதற்கு உபயோகிக்கலாம்; ஒருவனைக் கொலை செய்யவும் உபயோகிக்கலாம். நெருப்பை வெளிச்சம் தருவதற்கு அல்லது சமையல் செய்வதற்கு உபயோகிக்கலாம்; அல்லது ஒரு கட்டிடத்தை எரித்து அழிக்கவும் உபயோகிக்கலாம். நம்முடைய கண்கள் நல்லவைகளைப் பார்க்கவும் நம்மை வெளிச்சத்தில் நடத்தவும் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளைத் தீயவைகளைப் பார்க்கவும் தீய செயல்களைச் செய்ய உந்தும் கருவியாகவும் உபயோகிக்கலாம். அது நாம் எடுக்கும் முடிவு. கர்த்தர் மனிதனுக்குக் கொடுத்துள்ள கற்பனைகள் ஒவ்வொன்றையும் மீறுவதற்கு எப்படி கண் மூலகாரணமாயிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். கண் இருளாயிருப்பது வேலியே பயிரை மேய்வதற்கு சமம். உன் கண் உன் சரீரத்தின் விளக்காயிருக்கிறதா?             

ஜெபம்:

ஆண்டவரே, என் கண்கள் என்னை எப்போதும் வெளிச்சத்தில் நடத்தும் வழிகாட்டியாக இருக்க உதவிசெய்யும். ஆமென்.