காலைத் தியானம் – ஜனவரி 06, 2022

மத் 7: 1 – 5   

உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப் போடு   

                                    நாம் சாலையில் கார் ஓட்டும்போது பின்னால் வரும் வாகனங்களைப் பார்க்கும்படி மூன்று கண்ணாடிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று கண்ணாடிகளையும் உபயோகித்து கிட்டத்தட்ட பின்னால் வரும் எல்லா வாகனங்களையும் பார்த்துவிடலாம் என்றாலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து கொண்டிருக்கும் வாகனம் மூன்று கண்ணாடிகளிலும் தெரியாது. இதைக் “குருட்டு இடம்” அல்லது blind spot என்று சொல்வார்கள். அநேக சமயங்களில் நம்முடைய குறைகள் இப்படி ஒரு குருட்டு இடத்தில் இருந்துவிடுகின்றன. நம் கண்களுக்கு அவை தெரிவதில்லை. ஆனால் மற்றவர்களின் குறையோ மலை போல தெரிகின்றன. அடுத்த முறை, மற்ற விசுவாசிகளைப் பற்றியும், சபைப் போதகரைப் பற்றியும், பேராயரைப் பற்றியும் குறை சொல்ல நினைக்கும்போது, சற்று நிதானித்து உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தைப் பற்றி நினைத்துப் பார். அதை எடுத்துப் போட முயற்சி செய். மற்றவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்காக ஜெபம் செய்வதுதான் உன் பிரதான வேலை.           

ஜெபம்:

ஆண்டவரே, மற்றவர்களுக்காக ஜெபிக்கவும், என் குறைகளை நான் சரி செய்யவும் எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.