மத் 7: 9 – 12
மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ . . .
நன்மையானவைகளைக் கேட்கும் பிள்ளைகளுக்குப் பெற்றோர் நன்மையானவைகளை மாத்திரம் கொடுக்கிறார்கள். தீமையானவைகளைக் கேட்டால் கூட பெற்றோர் நன்மையானவைகளையே கொடுக்கிறார்கள். அதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஏனென்றால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள். பிள்ளைகள் நல்லவர்களாக இருந்தாலும், கெட்டவர்களாக இருந்தாலும் பெற்றோர்கள் பிள்ளைகளை நேசிப்பது போல, ஆண்டவர் நம் அனைவரையும் நேசிக்கிறார். ஆகையால் அவர் நமக்குக் கொடுப்பதில் குறைவானது எதுவும் இருக்கப் போவதில்லை. அதை நாம் விசுவாசிக்க வேண்டும். அதைவிட கடினமான பாடம் 12ம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நாமும் மற்றவர்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்று பார்க்காமல், நமக்குப் பிடித்தவர்களா அல்லது பிடிக்காதவர்களா என்று பார்க்காமல், எல்லாருக்கும் நன்மையானவைகளையே செய்யவும் கொடுக்கவும் வேண்டும். மற்றவர்கள் உனக்கு எப்படிப்பட்டவைகளைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறாய் என்பதுதான் அளவுகோல்.
ஜெபம்:
ஆண்டவரே, எல்லாருக்கும் நன்மை மாத்திரமே செய்யும் நல்மனதை எனக்குத் தாரும். ஆமென்.