காலைத் தியானம் – ஜனவரி 09, 2022

மத் 7: 13 – 20

கலா 5: 17 – 26  

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்    

                                    கள்ளத் தீர்க்கதரிசிகள் யார்? அவர்கள் தங்களைப் பரிசுத்தவான்களாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறவர்கள். உண்மையான தேவ பக்தியோ, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமோ இல்லாதவர்கள். தங்களுக்குப் பின் ஒரு பெரிய கூட்டம் வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள். விசுவாசத்தை வியாபாரமாக்கத் துணிந்தவர்கள். இன்றைய காலக்கட்டத்தில் இவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்ளுவது? பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் மாத்திரம் தீர்க்கதரிசிகளை எடை போடுங்கள். ஆவியின் கனிகளும் மாம்சத்தின் கிரியைகளும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை. வீண் புகழ்ச்சியை விரும்புவதுகூட ஆவியின் கனிக்கு முரண்பாடானது என்பதைக் கவனியுங்கள் (கலாத்தியர் 5:26). கள்ளத்தீர்க்கதரிசிகளை நியாயந்தீர்ப்பதோ அல்லது அவர்களைப் பற்றி போகுமிடமெல்லாம் குறைசொல்லிக் கொண்டே போவதோ நம்முடைய வேலையில்லை. அவர்களை அடையாளம் கண்டுக்கொண்டு அவர்களை நெருங்காமல் இருங்கள்.          

ஜெபம்:

ஆண்டவரே, கள்ளத் தீர்க்கதரிசிகளை அடையாளம் கண்டு கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.