காலைத் தியானம் – ஜனவரி 13, 2022

மத் 8: 14 – 22

மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்    

                                    இங்கு இயேசு, தன் சீஷன் அவனுடைய தகப்பனுடைய அடக்க ஆராதனைக்குப் போகக்கூடாது என்று சொல்லவில்லை. இயேசு, “பின்பற்றி வா” என்று அழைத்தவுடன் சீஷன் தன்னுடைய தகப்பனைக் கவனித்துக்கொள்ள வேண்டிய தன் பொறுப்பை சுட்டிக்காட்டி, தகப்பன் மரிக்கும் வரை அவரோடு இருந்துவிட்டு அதற்குப்பின் இயேசுவைப் பின்பற்றுவதாகச் சொன்னான். உடனடியாகக் கீழ்ப்படிவதுதான் கீழ்ப்படிதல். காலம் தாமதித்துக் கீழ்ப்படிவது கீழ்ப்படியாமைக்குச் சமம். பேதுருவின் மாமி சுகம் பெற்று எழுந்தவுடனேயே இயேசுவுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் பணிவிடை செய்ய ஆரம்பித்துவிட்டாள். அந்த சீஷனோ காலம் கடத்தினான். இயேசுவின் வார்த்தைகளுக்கு இன்றே கீழ்ப்படி. காலங்கடத்தாதே.

ஜெபம்:

ஆண்டவஆண்டவரே, உடனே கீழ்ப்படிய எனக்கு விசுவாசத்தைத் தாரும். ஆமென்.