மத் 8: 23 – 24
இயேசுவே, தேவனுடைய குமாரனே
ஒருமுறை ஒரு இஸ்லாமிய வானொலி ஒலிபரப்பில், திரித்துவம் என்பது கிறிஸ்தவர்களின் படைப்பு என்று சொல்லப்படுவதைக் கேட்டேன். திரித்துவ தேவனைப் புரிந்துதுகொள்ள முடியவில்லை என்பதால் திரித்துவத்தை உதறித் தள்ளிவிட முடியாது. புரிந்துகொள்ள முடியாத பலர் இயேசுவைத் தீர்க்கதரிசி என்றும், போதகர் என்றும், மதத் தலைவர் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். ஆகையால்தான் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை விரும்பும் நம் நாட்டிலுள்ள பல மனிதர்களுக்கு, இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிசாசுகளுக்குக் கூட இயேசுவே தேவனுடைய குமாரன் என்பது தெரியும். உன் விசுவாசத்தில் உறுதியாயிரு.
ஜெபம்:
பிதாவாகிய தேவனே, உமது குமாரனும் திரித்துவத்தில் ஒருவருமான இயேசு கிறிஸ்துவின் மூலம் என்னை மீட்டுக் கொண்டதற்காக நன்றி சுவாமி. ஆமென்.